முகப்பு /செய்தி /உலகம் / உலகின் பெரிய சதுப்பு நிலமான பேண்டனாலில் பற்றி எரியும் காட்டுத்தீ

உலகின் பெரிய சதுப்பு நிலமான பேண்டனாலில் பற்றி எரியும் காட்டுத்தீ

கோப்புப் படம்

கோப்புப் படம்

போதிய மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலமான பேண்டனாலில் அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட்டுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆகஸ்டின் முதல் 15 நாட்களில் மட்டும் இந்த பகுதிகளில் 3,121 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 5 மடங்கு அதிகமாகும்.

ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இந்த சதுப்பு நிலம் உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்புத் தன்மை கொண்டதாகும். அமேசான் காடுகளை ஒட்டியே இருக்கும் இந்த சதுப்பு நிலத்தில் 6 விழுக்காடு இந்தாண்டு மட்டும் தீயில் கருகியுள்ளது.

Also read... அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

8,500 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காடுகள் தீயில் அழிந்துவிட்டன. தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

First published: