20 ஆண்டுகள்... 1,500 ஏக்கர் காடு... பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி!

மரங்களின் எண்ணிக்கைப் பெருக இன்று பூச்சி முதல் வன விலங்குகள் வரையிலான ஒரு பல்லுயிர் சூழல் கொண்ட ஒரு காடு பரந்து விரிந்துக் கிடக்கிறது.

Web Desk | news18
Updated: April 27, 2019, 6:09 PM IST
20 ஆண்டுகள்... 1,500 ஏக்கர் காடு... பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி!
1999-ம் ஆண்டு மற்றும் 2019-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். (Image credit: institutoterra.)
Web Desk | news18
Updated: April 27, 2019, 6:09 PM IST
புகைப்படக் கலைஞரான செபாஸ்டியோ சால்கேடோ தனது மனைவி உடன் இணைந்து 20 ஆண்டுகளில் சுமார் 1,500 ஏக்கர் அளவிலான காடு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாய்நாடான பிரேசிலுக்குத் திரும்பியுள்ளார் செபாஸ்டியோ. பணி நிமித்தமாக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தாய்நாடு திரும்பியவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தான் சிறு வயதில் பச்சை பசேல் என்று பார்த்த ஒரு பெரிய மலையே வறண்டு பாலைவனமாகக் காட்சி அளித்திருக்கிறது. உயிரினமே வாழத் தகுதி அற்றப்பகுதியாக அந்த இடம் மாறியிருந்திருக்கிறது. நம்மில் பலரையும் போல் சுற்றுச்சூழல் சீர்கெட்டுவிட்டது எனப் புலம்பாமல் தனது மண்ணைக் காக்கத் தொடங்கியுள்ளார் செபாஸ்டியோ.

தனது மனைவி உடன் இணைந்து ஒவ்வொரு விதையாக விதைத்தவர் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சுமார் 1,500 ஏக்கர் அளவிலான ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். செடி, கொடிகள் வளர் முதலில் பூச்சிகளும் அதன் பின்னர் பறவைகளும் வந்து அந்த சோலைக்குள் தஞ்சமடையத் தொடங்கியுள்ளன.

செபாஸ்டியோ- லேலியா தம்பதியர். Image credit: institutoterra.


மரங்களின் எண்ணிக்கைப் பெருக இன்று பூச்சி முதல் வன விலங்குகள் வரையிலான ஒரு பல்லுயிர் சூழல் கொண்ட ஒரு காடு பரந்து விரிந்துக் கிடக்கிறது. 172 பறவை இனம், 33 பாலூட்டிகள் இனம், 293 தாவர இனம், 15 ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்குகள் மற்றும் நீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி கொண்ட 15 இனங்கள் என அழியும் நிலையிலிருந்து உயிரினத்தைக் கூட மீட்டெடுக்க உதவி உள்ளது இந்தக் காடு.

கூடுதலாக, வறண்டு போன எட்டு சுனை அருவிகள் இன்று உயிர்ப்பெற்றுள்ளன.
Loading...
மேலும் பார்க்க: தமிழகத்தை தாக்கும் ஃபனி புயல்! தற்போதைய நிலவரம்
First published: April 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...