ஃபிலிப்பைன்ஸில் வாம்கோ புயலால் பாதித்த குடும்பம்: உணவுக்காக மின்சார வயர்களின் மீது நடந்து சென்ற குடும்பத் தலைவர்

ஃபிலிப்பைன்ஸில் வாம்கோ புயலால் பாதித்த குடும்பம்: உணவுக்காக மின்சார வயர்களின் மீது நடந்து சென்ற குடும்பத் தலைவர்

உணவுக்காக மின்சார வயர்களின் மீது நடந்து சென்ற குடும்பத் தலைவர்

மரிகினா பகுதியில் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

  • Share this:
    ஃபிலிப்பைன்ஸில் உணவில்லாமல் தவித்த தன் குடும்பத்தினருக்கு உணவு பெற மின்சார வயர்களின் மீது குடும்பத்தலைவர் ஒருவர் நடந்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஃபிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட வாம்கோ புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மரிகினா பகுதியில் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.    இந்நிலையில் பசியால் வாடும் தன் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினரிடம் உணவைக் கேட்டுப் பெறுவதற்காக மின்சார வயர்களின் மீது குடும்பத்தலைவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார வயர்களைப் பிடித்துக் கொண்டே அவர் நடந்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
    Published by:Rizwan
    First published: