ஹோம் /நியூஸ் /உலகம் /

மூளையை முடக்கும் அமீபா தொற்று ; மிரட்டும் புதிய நோய்க்கு முதல் பலி...!

மூளையை முடக்கும் அமீபா தொற்று ; மிரட்டும் புதிய நோய்க்கு முதல் பலி...!

நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaSouth KoreaSouth KoreaSouth Korea

1960களில் ஆஸ்திரேலியாவில் புதிய உயிர்க்கொல்லி நோய் கிருமி  கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் அந்த ஒரு செல் உயிரி மனித மூளையை முடக்கி திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ நிபுணரான மால்கொம் ஃப்லோர் என்பவர்தான் இந்த நோய்க் கிருமியை முதன் முதலில் கண்டுபிடித்து. அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த விவரங்களையும் அவர் பதிவு செய்தார். இந்த ஒரு செல் உயிரி வெதுவெதுப்பான நன்னீரில் உருவாகி வளரக் கூடியது. சுவாசிப்பதன் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மெல்ல மெல்ல மூளைக்குள் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த நோய்க் கிருமி தாக்கினால் தலைவலி, காய்ச்சல், தும்மல் மற்றும் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். நோய்க் கிருமியின் தாக்கம் அதிகரிக்கும்போது, கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். ஒரு மனிதனிடம் இருந்து இந்த நோய்க் கிருமி மற்றவர்களுக்கு பரவாது. ஆனால் இந்த நோய்க் கிருமியால் ஏற்படும் பாதிப்பு மிகக் கொடியது என்கிறார்கள் மருத்துவ மற்றும் நோய்க்கிருமி வல்லுநர்கள். இந்த கொடிய நோய்க்கிருமி தாக்கி தென்கொரியாவில் முதன் முதலாக ஒருவர் பலியாகியுள்ளார்.

50 வயதான அந்நாட்டு குடிமகன் ஒருவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் தங்கியிருந்து விட்டு கடந்த 10ம் தேதி தென்கொரியா திரும்பியுள்ளார். அடுத்த நாளே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன் கிழமை அவர் உயிரிழந்தார். அவருக்கு நாக்லேரியா ஃபாவ்லேரி நோய்க் கிருமி தொற்று இருந்ததை மருத்துவ பரிசோதனைகள் மூலம் மருததுவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நோய்க் கிருமியின் தாக்கம் 1937 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்துள்ளது. ஆனால் அதன வகை என்னெவென்று தெரியாததால் வகைப்படுத்தப்படவில்லை.

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின் படி, இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா, சீனா மற்றம் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய்க்கிருமி 381 பேர்களை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 154 பேர் இந்த நோய்க்கிருமி தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது முதன் முதலாக தென்கொரியாவில் இந்த நோய்க் கிருமியின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கினால் 97 விழுக்காடு மரணம் உறுதி என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கிருமியின் பரவல் இருப்பதாக அறியப்படும் பகுதிகளில் ஏரியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். கோடை காலத்தில் இந்த நோய்க் கிருமி எளிதில் தாக்கும் என்றும், தண்ணீர் குடிப்பதால் நோய்க்கிருமி தாக்குதல் ஏற்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் : ரோசாரியோ ராய்

First published: