லாகூரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியது 15 வயது சிறுவன் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தற்கொலைத்தாக்குதலை நடத்திய சிறுவன் பாகிஸ்தானில் இயங்கும் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

news18
Updated: May 9, 2019, 10:57 AM IST
லாகூரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியது 15 வயது சிறுவன் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
லாகூர் குண்டுவெடிப்பு (Image: AP)
news18
Updated: May 9, 2019, 10:57 AM IST
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று மசூதிக்கு வெளியே நடந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது 15 வயது சிறுவன் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் டாடா டர்பார் பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் நேற்று காலை வழக்கமான தொழுகை நடைபெற்றது.

மசூதிக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென மசூதிக்கு வெளியா போலீசார் வாகனத்தின் அருகே குண்டு வெடித்தது.


இந்த குண்டு வெடிப்பில் 5 போலீசார் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாரைக் குறிவைத்தே இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. தாக்குதல் நடந்தது எப்படி என்பதும் பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெடிகுண்டுகளை உடலில் கட்டியிருந்த 15 வயது சிறுவன் மசூதிக்கு அருகே உள்ள பழக்கடையில் இருந்து வெளியே வந்து, சாலையைக் கடந்து பின்னர் போலீசாரின் வாகனத்துக்கு அருகே வந்து பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளார்.

தற்கொலைத்தாக்குதலை நடத்திய சிறுவன் பாகிஸ்தானில் இயங்கும் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading...

First published: May 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...