எண்ணிக்கை அதிகரிப்பால் யானைகளை வேட்டையாட போட்ஸ்வானா அரசு அனுமதி!

எண்ணிக்கை அதிகரிப்பால் யானைகளை வேட்டையாட போட்ஸ்வானா அரசு அனுமதி!
யானைகளை வேட்டையாட போட்ஸ்வானா அரசு அனுமதி
  • News18
  • Last Updated: February 12, 2020, 3:14 PM IST
  • Share this:
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் அதிகரித்து வந்த யானைகளின் எண்ணிக்கையால் யானைகளை வேட்டையாட சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மனித - விலங்கு மோதலை குறைக்கும் முயற்சியாக 70 யானைகளை வேட்டையாடுவதற்கு போட்ஸ்வானா நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக யானைகளை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அதிபர் சமீபத்தில் நீக்கினார்.


இதனிடையே அதிகரித்து வந்த யானைகளின் எண்ணிக்கையால் விளைநிலங்கள் வீணாவதாகவும், மனித - விலங்கு மோதல் அதிகரித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஏலம் மூலம் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading