வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற 100 காண்டாமிருகங்களின் கொம்புகள் அகற்றம்

போட்ஸ்வானாவில் 100 காண்டாமிருகங்களின் கொம்புகளை வன உயிரினத்துறை அகற்றியுள்ளது.

வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற 100 காண்டாமிருகங்களின் கொம்புகள் அகற்றம்
கோப்புப்படம்
  • Share this:
கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் வாயிலாக 100 வெள்ளை மற்றும் கறுப்பு காண்டாமிருகங்களின் கொம்புகளை அகற்றியுள்ளதாக வன உயிரினத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஒகாவாங்கோ (Okavango) டெல்டா பகுதியில் 58 காண்டாமிருகங்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.Also read... சீனாவுடனான ₹ 5,000 கோடி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு - மகாராஷ்டிர அரசு முடிவு

வேட்டைக்காரர்களால் காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்தது. காண்டாமிருகங்களின் கொம்புகள் ஆசிய கள்ளச் சந்தையில் ஒரு கிலோ 32,00,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

இதனால் வேட்டைக்காரர்களிடமிருந்து காண்டாமிருகங்களை காப்பாற்றும் வகையில் அரசே அவற்றின் கொம்புகளை அகற்ற முடிவெடுத்தது. அதன்படி நூறு காண்டாமிருகங்களின் கொம்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading