ஹோம் /நியூஸ் /உலகம் /

கிரிபாட்டி தீவில் பிறந்தது ‘2023’ ஆங்கிலப் புத்தாண்டு : வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்!

கிரிபாட்டி தீவில் பிறந்தது ‘2023’ ஆங்கிலப் புத்தாண்டு : வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்!

புத்தாண்டு பிறந்தது

புத்தாண்டு பிறந்தது

உலகிலேயே முதலாவதாக மத்திய பசுபிக் தீவு நாடான கிரிபாட்டியில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indianew zealandnew zealandnew zealandnew zealand

இனிமையான நினைவுகளுடன் 2022ஆம் ஆண்டு நம்மிடம் இருந்து விடைபெறுவதற்கு தயாராகிவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் 2023ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகிவிட்டோம். சென்னை உள்ளிட்ட இடங்களில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இந்த நிலையில் உலகிலேயே முதலாவதாக மத்திய பசுபிக் தீவு நாடான கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்தது. மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலும் புத்தாண்டு பிறந்தது.  மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்தபடி உற்சாகமாக கொண்டாடினர்.

புத்தாண்டு பிறந்தது

பூமியின் முதன் முனையில் அமைந்துள்ளதால் பகல், இரவை முதலில் எதிர்கொள்ளும் நாடாக  கிரிபாட்டி, கிரியாட்டி, தாங்கோ, சமோயா தீவுகளும் நியூசிலாந்தும்  உள்ளன. மேலும், நேரக் கணக்கின் காரணமாக புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாகவும் அவை உள்ளன.

அந்த வகையில் நியூசிலாந்து அருகே உள்ள குட்டித்தீவான கிரிபாட்டியில் இந்திய நேரப்படி டிசம்பர் பிற்பகல் 3.30 மணிக்கு  புத்தாண்டு பிறந்தது. இதேபோல அமெரிக்கா அருகிலுள்ள மக்கள் வசிக்காத பேக்கர், ஹவுலாந்து தீவுகளில்தான் புத்தாண்டு கடைசியாக பிறக்கிறது. அங்கு இந்திய நேரப்படி ஜனவரி 1 மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதால் பல்வேறு நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

First published:

Tags: New Year 2023, New Year Celebration