ஹோம் /நியூஸ் /உலகம் /

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்!

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

பிரெக்சிட் விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரேசா மே அறிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான உட்கட்சி தேர்தலின் முதல் சுற்றில், போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றுள்ளார்.

பிரெக்சிட் வாக்கெடுப்பில் தொடர் தோல்வியை சந்தித்த தெரசா மே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து அவரது கன்சர்வேடிவ் கட்சி சார்பில், அடுத்த பிரதமருக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான போரிஸ் ஜான்சன் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். 114 எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவளித்துள்ள நிலையில்,போரிஸ் ஜான்சன் அடுத்த இங்கிலாந்து பிரதமராவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக ஜெரேமி ஹண்ட் 43 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அடுத்தவாரம் இரண்டாவது சுற்று தேர்தல் நடக்க உள்ளது.

பிரெக்சிட் விவகாரத்தில் தெரேசா மே உடன் கருத்து மோதல் ஏற்பட்டதன் காரணமாக போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BREXIT