ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல்...!

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல்...!

பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரதமர் போரிஸ் ஜான்சன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது.

இதன் தொடர்ச்சியாக உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சியுமே பிரதான போட்டியாளர்களாக கருதப்படுகிறது.

பிரெக்சிட் விவகாரமே இந்தத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என கணிக்கப்பட்டாலும், இரு கட்சியின் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் பரப்புரையில் மவுனம் காத்தே வந்தனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் படி போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

339 இடங்களை அந்தக் கட்சி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சிக்கு 231 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான போரிஸ் ஜான்சானின் வெற்றிவாய்ப்பு மங்கியுள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published:

Tags: BREXIT