ஜெர்மி ஹண்டைத் தோற்கடித்து இங்கிலாந்தின் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்!

கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவரைத் தீர்மானித்தன.

news18
Updated: July 23, 2019, 7:18 PM IST
ஜெர்மி ஹண்டைத் தோற்கடித்து இங்கிலாந்தின் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்!
போரிஸ் ஜான்சன்
news18
Updated: July 23, 2019, 7:18 PM IST
இங்கிலாந்தின் நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்ப்பது உறுதியாகியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்நாடு முடிவு செய்ததது. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். அதனையடுத்து, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமராக செயல்படுவார்.  அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவருக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவரைத் தீர்மானித்தன. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினர். வாக்குச்சீட்டுகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரிஸ் ஜான்சனுக்கு 92,153 வாக்குகளும், ஜெர்மி ஹண்டுக்கு 46,656 வாக்குகளும் கிடைத்துள்ளன. ம மொத்தமாக 87.4 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் போரிஸ் ஜான்சனுக்கு மட்டும் 66.4 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

Also see:

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...