Home /News /international /

Covid-19 Omicron| ஆறுதல் செய்தி: ஓமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் 88% பாதுகாப்பு- ஆய்வில் தகவல்

Covid-19 Omicron| ஆறுதல் செய்தி: ஓமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி பூஸ்டர் டோஸ் 88% பாதுகாப்பு- ஆய்வில் தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா வைரஸ் மீண்டும் உலகில் பரவி வருவதையடுத்து கடும் பீதி ஏற்பட்டுள்ள நிலையிலும் தடுப்பூசிகள் மீண்டும் கொரோனா தொற்றுவதை தவிர்க்க முடியவில்லை என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து ஆய்வாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஓமைக்ரான் வைரஸிலிருந்து 88% பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    கொரோனா வைரஸ் மீண்டும் உலகில் பரவி வருவதையடுத்து கடும் பீதி ஏற்பட்டுள்ள நிலையிலும் தடுப்பூசிகள் மீண்டும் கொரோனா தொற்றுவதை தவிர்க்க முடியவில்லை என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து ஆய்வாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஓமைக்ரான் வைரஸிலிருந்து 88% பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரானில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இந்தியாவிலும் தொடங்குகிறது.

    இந்தநிலையில், பூஸ்டர் தடுப்பூசி, ஒமைக்ரானுக்கு எதிராக எவ்விதம் செயல்படும் என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவுகளை இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது:

    “2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரானுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்கு பிறகு அதன் பாதுகாப்பு திறன் 52 சதவீதமாக குறைகிறது.

    ஆனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டவுடன் அதன் பாதுகாப்பு திறன் 88 சதவீதமாக அதிகரிக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமைக்ரானுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஆபத்தும் குறைகிறது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகளும் 2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து கணிசமாக குறைவாக இருப்பதை காட்டுகின்றன.

    டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரானுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காக உள்ளது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய போதும் பயனில்லை, கோவிட் புயல் நம்மை நெருங்கி வருகிறது என கவலை தெரிவித்துள்ளார்.

    Also Read: 10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா

    அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலி எண்ணிக்கையும் 2,000ஐ நெருங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் ஆய்வு பூஸ்டர் டோஸ் பற்றி கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி