பாலிவுட்டைக் காப்பி அடிக்காமல் சொந்தமாகச் சிந்தியுங்கள்: பாகிஸ்தான் இயக்குநர்களுக்கு பிரதமர் இம்ரான் அறிவுரை

இம்ரான் கான்

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் திரைப்பட இயக்குனர்கள், பாலிவுட் படங்களை காப்பி அடிப்பதை நிறுத்தி, சொந்தமாக சிந்திக்க துவங்க வேண்டும்,' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுரை வழங்கினார்.

 • Share this:
  பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் திரைப்பட இயக்குனர்கள், பாலிவுட் படங்களை காப்பி அடிப்பதை நிறுத்தி, சொந்தமாக சிந்திக்க துவங்க வேண்டும்,' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுரை வழங்கினார்.

  மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பி அடிப்பதற்கு சமம் இது என்று கூறிஉள்ளார் இம்ரான் கான். இந்தித் திரைப்படங்களில் என்ன கலாச்சாரம் பிரதிபலிக்கப்படுகிறது என்பது விவாதத்துக்குரியதே.

  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றத்தில் முதலில் அடி வாங்குவது பாலிவுட் படங்கள், இரண்டாவது இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள். 2019-ல் 150 தியேட்டர்களில் 22 உருது மொழிப் படங்களே ரிலீஸ் ஆகின. இதன் மூலம் 1.5 பில்லியன் ரூபாய்கள்தான் வருவாய் கிடைத்தது. அங்கு பாலிவுட் படங்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.

  இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடந்த குறும்பட விழாவில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:

  பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் ஹிந்தி திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்த பாணியிலேயே படம் எடுக்கும் தவறை செய்கின்றனர். இது, மற்றொரு நாட்டின் கலாசாரத்தை நாம், 'காப்பி' அடிப்பதை போன்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  என் சொந்த அனுபவத்தில் இளம் இயக்குனர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். அசலுக்கு இருக்கும் மதிப்பு, போலிகளுக்கு என்றைக்குமே இருக்காது. எனவே இளம் இயக்குனர்கள் புதிய சிந்தனைகளை நம் திரைப்படங்களில் பயன்படுத்த வேண்டும். தோல்விகளை பார்த்து அஞ்சாதீர்கள். நம்மை நாம் மதித்தால் தான், இந்த உலகம் நம்மை மதிக்கும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  வாய் தவறி கூறிவிட்டார்...

  இதற்கிடையே, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை, பாக்., பிரதமர் இம்ரான் கான், 'மாவீரர்' என, சமீபத்தில் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து பாக்., அமைச்சர் பவத் சவுத்ரி கூறுகையில், 'பிரதமர் இம்ரான் கான், வாய் தவறி அப்படி கூறி விட்டார்,'' என, விளக்கம் அளித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: