போயிங் ரக விமான விபத்துகளில் உயிரிழந்த 346 குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு

போயிங் ரக விமான விபத்துகளில் உயிரிழந்த 346 குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2019, 10:45 PM IST
  • Share this:
அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 737 மேக்ஸ் விமான விபத்துகளில் உயிரிழந்த, 346 குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேக்ஸ் ரக விமானங்கள் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் விபத்துக்கு உள்ளாகின. இந்தோனேசியா விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 189 பேரும், எத்தியோப்பியா விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்துகளுக்கு சாப்ட்வேர் பிரச்னைகள் தான் காரணம் என புகார் எழுந்தது. இந்நிலையில் போயிங் நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடியே 2 லட்சத்து 46ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Watch

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்