ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை முட்டாள் என்று பேசிய அமெரிக்க விமான நிறுவன நிர்வாகிகள்!!

இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை முட்டாள் என்று பேசிய அமெரிக்க விமான நிறுவன நிர்வாகிகள்!!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய விமான போக்குவரத்துதுறை அதிகாரிகளை போயிங் நிறுவன நிர்வாகிகள் முட்டாள் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் தனது வர்த்தகம் தொடர்பான ஆவணங்களை அந்நாட்டு போக்குவரத்து நிர்வாகம் மற்றும் காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், இந்தியாவில் 2017-ம் ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வாங்குவது தொடர்பாக அந்நிறுவன நிர்வாகிகள் இருவர் செல்போன் மெசேஜ் வாயிலாக உரையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  அப்போது, விமானங்களை இயக்குவதற்கான விமானப் போக்குவரத்து இயக்குநரக நிர்வாகிகள் எப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என ஒருவர் குறிப்பிட்டதாகவும், அதனை மற்றொருவர் ஆமோதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரங்கு மேற்பார்வையின் கீழ் போயிங் விமானம் முட்டாள்களால் வடிவமைக்கப்பட்டது போன்ற வார்த்தைகளையும் அந்நிறுவன நிர்வாகிகள் பயன்படுத்தியது ஆவணங்களில் உள்ளது.

  Also see:

   

  Published by:Karthick S
  First published: