ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த அமெரிக்க ராணுவ விமானம்...

ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த அமெரிக்க ராணுவ விமானம்...

மாதிரி படம்

மாதிரி படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்காவுக்கு சொந்தமான ராணுவ விமானம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்துள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தென்மேற்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும், தீயை தாலிபான் தீவிரவாதிகள் அணைத்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்த தகவலை பழங்குடியினர் தெரிவித்ததாக பத்திரிகையாளரான பிலால் சர்வாரி தெரிவித்திருந்தார். விபத்துக்குள்ளான விமானம், ஆப்கானிஸ்தான் அரசு விமானம் என முதலில் தகவல் வெளியான நிலையில், அதை அவ்விமான நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.

  இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க விமானப்படையின் குறியீட்டுடன் இருப்பதாகக் கூறி புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை தாலிபான் அமைப்பு வெளியிட்டது. அதில் அது "பம்பார்டியர் இ - 11 ஏ" ஜெட் ரக விமானம் என்பதும், அதை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறையினர் தங்களுக்குச் சொந்தமான விமானம் ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்ததை உறுதி செய்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எதிரிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

  விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தெளிவாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து கூடுதல் தகவல்களை தெரிவிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: