ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாவது வழக்கம். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக புதின் நீண்டகாலமாக இருந்து வருகிறார். இருப்பினும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமாகவே இருந்து வருகிறது. புதின் தனது ஆராம்ப காலத்தில் உளவாளியாக இருந்த நிலையில் அவரது தன்னுடைய பெரும்பாலான நடவடிக்கைகளை ரகசியமாகவே வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், புதினின் உடல் நிலை குறித்து புதிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு புலனாய்வு நிருபர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ரஷ்ய அதிபர் புதின் தன்னுடைய உடல் நிலை குறித்த தகவல்களை வெளியே கசியவிடக் கூடாது என்பதில் கறாராக உள்ளவர். தான் ஆரோக்கியத்துடன் பலமான உடல் நிலை கொண்டவர் என்ற பிம்பத்தை இவர் எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர். தனக்கு உடல் நலக்குறைவு இருந்து அந்த தகவல் வெளியே பரவினால் ரஷ்யாவில் அவரது எதிரிகள் அதிகாரத்தை அசைத்து பார்த்துவிடுவார் என்ற அச்சம் புதினுக்கு உண்டு. எனவே, ரஷ்யாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் போது புதின் தன்னுடைய சிறுநீர் இயற்கை உள்ளிட்ட கழிவுகள், உபாதைகளை எடுத்து வைத்துக்கொள்ள தனி பாடிகார்ட்டை வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது கழிவுகளை கொண்டு அவரின் உடல் நலனின் விவரத்தை கண்டறிந்து விடக்கூடாது என இந்த ஏற்பாட்டை புதின் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதற்காகவே பிரத்தியேக பாடிகார்டு ஒருவர் வெளிநாட்டு பயணங்களின் போது சூட்கேஸ் உடன் புதினுடன் செல்வார் என பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க: போருக்குப் பின் 100 நாள்களில் எண்ணெய் விற்பனை செய்து ரஷ்யா ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்தே புதினின் உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் புரளியாக பேசப்பட்டு வருகின்றன. புதின் தற்போது மிக மோசமான உடல்நிலையில் உள்ளார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன. 1999ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 23 ஆண்டுகாலம் ரஷ்யாவின் தலைமை பொறுப்பில் இருந்து ஆட்சி நடத்தி வருகிறார் புதின்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vladimir Putin