ஹோம் /நியூஸ் /உலகம் /

புலம் பெயர் மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 77 பேர் பரிதாப மரணம்

புலம் பெயர் மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 77 பேர் பரிதாப மரணம்

படகு விபத்தில் 77 புலம் பெயர் மக்கள் மரணம்

படகு விபத்தில் 77 புலம் பெயர் மக்கள் மரணம்

லெபானான் நாட்டைச் சேர்ந்த புலம் பெயர் மக்கள் 77 பேர் படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaDamascusDamascus

  லெபனான், சிரியா, பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் பொருளாதார பாதிப்பு காரணமாக பலர் தங்கள் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளியேறும் அவலம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

  குறிப்பாக கடல் வழியாக படகில் பல மக்கள் தப்பி சென்று ஐரோப்பாவை நோக்கி அடைக்கலம் புகும் சூழலில் இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். லெபானானில் 2019ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிடைக்கும் வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி சென்று தப்பிவிட வேண்டும் என சிறிய படகில் பல மக்கள் முந்தியடித்துக்கொண்டு செல்கின்றனர். அப்படி, கடந்த வாரம் சுமார் 150 பேர் சிறிய படகில் ஏறி புலம் பெயர திட்டமிட்டுள்ளனர். இந்த படகானது சிரியாவின் டார்டஸ் நகர் அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 77 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  இதையும் படிங்க: அமைதியை விரும்பினால் முதலில் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் - பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்

  இந்த தகவலை சிரிய நாட்டின் சுகாதார அமைச்சர் ஹசன் அல் கபாஷ் உறுதி செய்துள்ளார். தப்பி பிழைத்த 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுவரை நடைபெற்றதிலேயே மிக மோசமான படகு விபத்து இதுவே என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. லெபானாலில் இருந்து பெரும்பாலான படகுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த சைப்ரஸ் நாட்டிற்கு செல்லவே முயற்சிக்கின்றன. இவை வழியில் சிரியா நாட்டை அடைந்து அங்கும் சிலரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கின்றன.

  இந்த புலம்பெயர் மக்கள் பிரச்சனையை சர்வதேச நாடுகளும், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளும் உடனடியாக தலையீட்டு தீர்வு காண வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தொடர் கோரிக்கை வைக்கின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Lebanon, Migrants, Syria