ஹோம் /நியூஸ் /உலகம் /

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து கோர விபத்து.. 76 பேர் பலியான சோகம்!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து கோர விபத்து.. 76 பேர் பலியான சோகம்!

படகு விபத்தில் 76 பேர் பலி

படகு விபத்தில் 76 பேர் பலி

அந்நாட்டில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaAbujaAbuja

  நைஜீரியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 76 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரம் சம்பவம் நடந்துள்ளது.

  ஆப்ரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நாடு நைஜீரியா. அந்நாட்டில் வரலாறு காணாத வகையில் இந்தாண்டு கனமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தலைநகரில் மட்டும் 5 லட்சம் பேர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

  இந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்துவரும் நிலையில், 300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கிய நிலையில், அந்நாட்டின் அனம்பரா என்ற பகுதியில் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க படகு மூலம் வெளியேறிய முயற்சித்துள்ளனர்.

  இதையும் படிங்க: அடேங்கப்பா..290 அடியா! உலகின் மிக உயரமான மரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

  ஒக்பாரு என்ற பகுதியில் 85 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த 76 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படகு விபத்து குறித்த தகவல் வெளியான உடன் அந்நாட்டின் அவசர கால மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் துரிதமாக களமிறங்கினர். இருப்பினும், வெள்ளத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததால் படகில் பயணித்த உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 76 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 9 பேரை தேடும் பணியில் வீரர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

  இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீப காலமாகவே நைஜீரியாவில் கடும் உணவு பொருள் தட்டுப்பாட்டு நிலவி வருகிறது.கோவிட்-19 பாதிப்பு, ரஷ்யா -உக்ரைன் போர் ஆகியவற்றினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் நைஜீரியாவில் இந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு கூடுதல் சவாலாக உருவெடுத்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Boat capsized, Disasters, Flood, Nigeria