ஹோம் /நியூஸ் /உலகம் /

US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறுப்பு.. வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்..

US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறுப்பு.. வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்..

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மொத்தம் 538 இடங்களில், ஜோ பைடன் 85 இடங்களிலும், ட்ரம்ப் 55 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறார்கள். கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே,  தபால் வாயிலாக 10 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், மேலும், ஆறு கோடி பேர், நேரில் வாக்களிக்க உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இனப்பாகுபாடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதிபர் டிரம்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தினர் நேற்று வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர்.

US election Results 2020: சர்ச்சை நாயகன் டிரம்புக்கு 2020 தேர்தல் கைகொடுக்குமா?

தேர்தல் நிறைவடையும் நேரத்தில் வெள்ளை மாளிகை முன்பாக திரண்ட அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறு கைகலப்பு ஏற்பட்டது. தேர்தலையொட்டி நிகழும் வன்முறைகளை தடுக்க 16 மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெள்ளை மாளிகை முன்பாகத் திரண்ட போரட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை தான் ஏற்காமலும் போகலாம் என டிரம்ப் கூறியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் திரண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?

இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2016-இல் நடந்த தேர்தலில், 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில், 4.70 கோடி பேர் மட்டுமே, தபால் ஓட்டுகளை அளித்தனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க, அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..

அதன்படி, இதுவரை, 9.40 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலைவிட, இரண்டு மடங்கு அதிகம். கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. இந்திய நேரப்படி, நாளை அதிகாலை வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது.

First published:

Tags: Donald Trump, Protest, US Election 2020, White house