ஹோம் /நியூஸ் /உலகம் /

கெர்ச் பாலத்தில் தீ விபத்து : ’இப்படித்தான் நடக்கும்...’ - ரஷ்யாவை சாடிய உக்ரைன்!

கெர்ச் பாலத்தில் தீ விபத்து : ’இப்படித்தான் நடக்கும்...’ - ரஷ்யாவை சாடிய உக்ரைன்!

கெர்ச் பாலம்

கெர்ச் பாலம்

கிரிமியா - ரஷ்யாவை இணைக்கும் கெர்ச் பாலத்தில் நடந்த தீ விபத்தை அடுத்து கிரிமியா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, IndiaMoscow Moscow

  உக்ரைனுடன் ரஷ்யா நடத்தும் போரில் போக்குவரத்துக்கு முக்கிய பங்காக விளங்கும் ச்- ரஷ்யாவை இணைக்கும் கெர்ச் பாலத்தில் நடந்த வெடிவிபத்தை உக்ரைன் மறைமுகமாக கிண்டலடித்துள்ளனர். மேலும் ரஷ்யா தற்போது வெடி சம்பவத்தையடுத்து பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

  உக்ரைனின் தென் பகுதியில் இருக்கும் கிரிமியாவை கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் கிரிமியா தீபகற்பத்தையும் ரஷ்யாவையும் இணைக்கும் கெர்ச் வகையில் பாலத்தை அங்குக் கட்டியது. தற்போது உக்ரைனுடன் நடத்தும் போருக்கு ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் எரிபொருள்கள் உக்ரைனியில் போரில் ஈடுப்பட்டு இருக்கும் ரஷ்ய படைகளுக்கும் செல்கிறது.

  அந்த வகையில் ரஷ்யாவையும் கிரிமியாவையும் அந்த பாலம் மட்டும்தான் இணைக்கிறது. அதன் வழியாகத் தான் ரஷ்யாவிலிருந்து பொருட்கள் கிரிமியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாலத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பாலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

  இதற்கு கிரிமியாவில் இருக்கும் ரஷ்யா அமைப்பு உக்ரைன் மேல் குற்றம் சாட்டியது. ஆனால் அதற்கு ரஷ்யாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் விசாரணையில் அது ரஷ்யாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ பரவி வெடித்துச் சிதறியுள்ளது என்று தெரியவந்தது.

  Also Read : வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல ஆசையா? அதிரடி சலுகையாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்!

  தீ பெரிய அளவில் பரவி 19 கி.மீ பாலத்தில் இரண்டு பகுதியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் அதில் 3 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைவழி மற்றும் ரயில் வழிப் பாதையைக் கொண்டுள்ள கெர்ச் பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்து சுற்றி வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் பிறநாடுகளில் தவறான முறையில் ஆக்கிரமித்துக் கட்டினால் இது போன்றுதான் நடக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட அந்நாட்டினர் மறைமுகமாக கிண்டல் செய்து கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

  இதைத்தொடர்ந்து ரஷ்யாவிற்குப் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வின் காரணத்தினால் ரஷ்யா அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Blast, Russia - Ukraine