ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கான் கல்வி நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு..19 மாணவர்கள் மரணம்

ஆப்கான் கல்வி நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு..19 மாணவர்கள் மரணம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி நிலையத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiakabulkabul

  ஆப்கானில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிறுபான்மை மக்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் காபூலுக்கு மேற்கு பகுதியில் தஸ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் ஷியா இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு காஜ் உயர் கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு மாணவ, மாணவியர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காக பயின்று வருகின்றனர். இந்த கல்வி நிறுவனத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

  இதில், அங்கு படித்து வரும் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாணவியர்களே என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு உரிய சிகிச்சை அளிக்கும் பயணியில் ஈடுபட்டனர். உயிர்சேதம் குறித்த தற்போது முதற்கட்ட தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க: உக்ரைனில் இரு பிராந்தியங்களை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா!

  எனவே, முழுமையான விவரம் வெளியாகும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கல்வி நிலையத்தில் மாணவர் உருவில் பயங்கரவாதி நுழைந்து இந்த தாக்குதலில் நடத்தியிருக்கலாம் என உள்துறை அமைப்பு விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

  தாலிபான் ஆட்சிக்குப் பின் அங்கு மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், கல்வி நிலையத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Afghanistan, Bomb blast, Terror Attack