முகப்பு /செய்தி /உலகம் / மகனிடமே கத்தி முனையில் திருட முயன்று 26 மாத சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை... விநோத சம்பவம்!

மகனிடமே கத்தி முனையில் திருட முயன்று 26 மாத சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை... விநோத சம்பவம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனது மகனிடமே கத்தி முனையில் திருட முயன்ற தந்தைக்கு 26 மாதம் சிறை தண்டனை வழங்கி ஸ்காட்லாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaGlasgowGlasgowGlasgow

தனது மகனிடமே கத்தி முனையில் திருட முயன்ற நபரை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள ஏடிஎம் ஒன்றில் 17 வயது சிறுவன் 10 பவுண்ட் பணம் எடுக்க சென்றுள்ளான். இந்த ஏடிஎம் சிறுவனின் வீட்டின் அருகே தான் இருந்துள்ளது. அந்த சிறுவனோ ஏடிஎம் கார்டை போட்டு, இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்கும் போது முகமூடி அணிந்த ஒரு நபர் கத்தியை கழுத்தில் வைத்து பணத்தை எண்ணிடம் கொடுத்து விடு என மிரட்டியுள்ளார்.

ஆனால், அந்த திருடனின் குரலை கேட்டதும் சிறுவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், அந்த திருடன் வேறு யாரும் அல்ல தந்தை தான். குரலை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன், முகமூடி அந்த நபரிடம் சீரியஸாக தான் செய்கிறீர்களா. நான் யார் என்று தெரியுமா என்று கேட்டுள்ளான்.

ஆனால் முதலின் அவர் சிறுவனின் பேச்சை கண்டுகொள்ளாமல் மிரட்டியுள்ளார். பின்னர் அந்த நபரின் முகமூடியை இழுத்து கழுட்டி என்ன செய்கிறீர்கள் என்று கேட்கே, பின்னர் தான் அந்த நபருக்கு மகனிடம் தான் திருட வந்துள்ளோம் என தெரிந்துள்ளது.  இருவருக்கும் அதிர்ச்சியில் இருந்த நிலையில், நான் வேறுவழியில்லாமல் இவ்வாறு செய்கிறேன் என மகனிடம் தந்தை மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால், அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று தனது தந்தை செய்த காரியத்தை தாய் மற்றும் சகோதரர்களிடம் கூறவே அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 26 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது ஒரு அசாதாரண நிகழ்வு என நகரத்தின் ஷெரிப் அண்ட்ரூ க்யூபி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Father, Robbery, Scotland