வெள்ளை மாளிகை போராட்டத்திற்கு முன்னதாக குறிப்பிட்ட சிலருக்கு பிட்காயின் முறையில் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிமாற்றம் என தகவல்

வெள்ளை மாளிகை போராட்டத்திற்கு முன்னர் குறீப்பிட்ட சிலருக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பிட்காயின் முறையில் பரிமாற்றம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகை போராட்டத்திற்கு முன்னர் குறீப்பிட்ட சிலருக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் பிட்காயின் முறையில் பரிமாற்றம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
வெள்ளை மாளிகை கலவரத்திற்கு முன்னதாக 5 லட்ச டாலர்களுக்கும் மேலான தொகை பிட்காயின் முறையில் பலருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக Chainalysis எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chainalysis நிறுவனத்தின் பிளாகில் வெளியான தகவலின்படி ஃபிரான்ஸை சேர்ந்த ஒருவர் 28.15 பிட்காயின்களை நன்கொடையாக அனுப்பியிருப்பதாகவும், ஒரே பரிவர்த்தனையில் இப்பணம் கைமாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Chainalysis நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் பற்றிய தகவல்களை இந்நிறுவனம் திரட்டி வருகிறது. இதன்படி 22 வித்தியாசமான கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் சமூக வலைத்தள மற்றும் இணையதள பிரபலங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வளவு தொகையினையும் பிரான்சை சேர்ந்தவர் அனுப்பியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பரிவர்த்தனையில் Nick Fuentes என்பவருக்கு அதிகபட்சமாக 2,50,000 லட்சம் டாலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வு பேச்சு காரணமாக யூடியூபரான Nick Fuentes-ன் பக்கத்தை யூடியூப் அண்மையில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை ஏற்காத டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கடந்த வாரம் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களில் சிலர் அதிபர் மாளிகைக்குள் அத்து மீறி நுழைந்ததுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி, தூக்கிச் சென்றனர். இக்கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். ஒரு காவல்துறை அதிகாரியும் உயிரிழக்க நேரிட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே கருப்பு நாள் என அமெரிக்கர்கள் பலரும் குறிப்பிட்டனர்.

வெள்ளை மாளிகை போராட்டம் காரணமாக தலைநகர் வாஷிங்டனில் 15 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே புதிய அதிபராக ஜோ பைடன் விரைவில் பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: