மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி காலமான நிலையில், அவரது உடலுக்கு ஸ்காட்லாந்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் லண்டனுக்கு கொண்டுவரப்பட்டு, பக்கிங்காம் மாளிகையில் அரச குடும்பத்தினர் மரியாதை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் நின்று அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து நேற்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் தொடங்கின. பிரிட்டன் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, பல இடங்களில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த எலிசபெத் ராணியின் உடலுக்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய பிறகு, அங்கிருந்து 1952ஆம் ஆண்டு ராணியின் தந்தை மரணத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஊர்தியில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பாரம்பரியமான பீரங்கி ஊர்தியில் ராணியின் உடல் வைக்கப்பட்டது. அதனை 142 மாலுமிகளை கொண்ட ராயல் நேவி குழுவினர் இழுத்துச் சென்றனர். ராணியின் சவப்பெட்டி மீது, கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அவரது கிரீடம், செங்கோல் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஊர்தியை மன்னர் சார்லஸ் மற்றும் குடும்பத்தினர், தங்களது பாரம்பரிய உடையில் பின் தொடர்ந்து வந்தபோது, ஸ்காட்டிஷ், ஐரிஷ் படைக்குழுவினர் வாத்தியங்களை இசைத்தனர். வின்ட்சர் CASTLE வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலய வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத்தின் உடலுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் எலிசபெத் ராணியின் உடல், வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் CHAPEL-க்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது இளவரசர் ஜார்ஜ், சார்லட் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
பிரார்த்தனையின்போது, ராணியின் வயதை குறிப்பிடும் வகையில் 96 முறை தேவாலய மணி ஒலிக்கப்பட்டது.
எலிசபெத் ராணியின் உடல் அடக்கத்திற்காக ராயல் வால்ட் தயாரான நிலையில், குதிரைப்படை மரியாதையுடன் உடல் அடக்க இறுதி ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து இறுதி அடக்கம் செய்யப்படும் வின்ட்சர் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருபுறத்திலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, ராணி எலிசபெத்துக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
இறுதியாக ராயல் வால்ட் பகுதிக்கு இராண்டாம் எலிசபெத் ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தார் மட்டுமே பங்கேற்ற தனிப்பட்ட பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் எலிசபெத் ராணியின் உடல், அவரது கணவர் பிலிப்பின் கல்லறைக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதியாக வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Funeral, Queen Elizabeth