ஹோம் /நியூஸ் /உலகம் /

கடல்தான் பாதை.. 11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. ஓய்வெடுக்காமல் பறந்த பறவை..!

கடல்தான் பாதை.. 11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. ஓய்வெடுக்காமல் பறந்த பறவை..!

கின்னஸ் சாதனை படைத்த பறவை

கின்னஸ் சாதனை படைத்த பறவை

உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிமீ பறந்து சாதனை படைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலகில் நீண்ட தூர பயணம் விடாமல் மேற்கொள்வது இந்த பறவைகள் தான். காலம் மாறும் பொது அது இடம்பெயரும் பறவைகள் தான் இருக்கும் பறவைகளிலேயே அதிக தூரம் பறக்கிறது. அப்படி உணவு, ஓய்வு என்று எங்கும் நிற்காமல் 11 நாட்கள் பறந்து ஒரு பறவை தற்போது சாதனை படைத்துள்ளது.

வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் (bar-tailed godwit) என்ற பறவை இனம் உள்ளது. குளிர் காலத்தின் பனி அதிகம் ஆகும் நேரம் அது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி இடையே ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும். ஆனால் இது தண்ணீரில் தரை இறங்காது. அதக்கிற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. இதன் உடல் அமைப்பு தண்ணீரில் மிதக்க ஏற்றது அல்ல. அதனால் தண்ணீரில் தெரியாமல் விழுந்தால் கூட பறவைக்கு இறப்பு தான். இதனாலேயே இந்த பறவை நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.

தாஸ்மேனியாவைச் சேர்ந்த எரிக் வோஹ்லர் என்ற ஆர்வலர், கின்னஸ் உலக சாதனையிடம், "பறவைகள் தொடர்ந்து இரவும் பகலும் பறக்கும் போது அதன் உடல் எடையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவற்றை இழந்திருக்கலாம்" என்று கூறினார்.

இடப்பெயர்ச்சி பறவைகள் பறக்கும் தூரம் காலம் ஆகியவற்றை  செயற்கைக்கோள் குறியீடுகளை வைத்து பறவை ஆர்வலர்கள்  கண்காணிப்பர். அப்படி தொடர்ந்து நீண்ட தூரம் பறக்கும் பறவைகளை கண்டுபிடித்து அதை பதிவு செய்வர். அதிக தூரம் பறக்கும் பறவைகளை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் குறிப்பிடுவர். இது அந்த பறவைக்கு தெரியுமா என்று கேட்க கூடாது...!அப்படி 2020 இல் இதே காட்விட் இன பறவை ஒன்று விடாமல் 217 மைல்களைத் தாண்டி சாதனை படைத்தது.  அதை இப்போது "234684" என்ற டேக் எண் கொண்ட பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), முறியடித்துள்ளது.

உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்)  பறந்து சாதனை படைத்துள்ளது. இது  கிரகத்தின் முழு சுற்றளவில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு தூரம் ஆகும்.

அக்டோபர் 13, 2022 அன்று தொடங்கிய அதன் பயணம் 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்தது. காட்விட் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5G செயற்கைக்கோள் குறிச்சொல் மூலம் தான் இந்த தூரம் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பொது து தான் லேட்டஸ்ட் இடைவிடாத  நீண்ட தூர பயணம் செய்த பறவை. யாரை பார்க்க அப்படி விடாமல் போனதோ தெரியவில்லை!

First published:

Tags: Birds, Record