சிறுநீர் மூலம் தயாராகும் செங்கற்கள்- மறுசுழற்சியில் தென் ஆப்ரிக்கா!

உலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்

Web Desk | news18
Updated: November 29, 2018, 8:18 PM IST
சிறுநீர் மூலம் தயாராகும் செங்கற்கள்- மறுசுழற்சியில் தென் ஆப்ரிக்கா!
உலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்
Web Desk | news18
Updated: November 29, 2018, 8:18 PM IST
சுற்றச்சூழலை பாதுகாக்க உலகிலேயே முதன் முறையாக சிறுநீர் மூலம் தயாராகும் ‘பயோ’ செங்கற்களை அறிமுகப்படுத்தியுள்ளது தென் ஆப்ரிக்கா.

மறுசுழற்சித் திட்ட முறையில் சர்வதேச நாடுகளுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்களின் இப்புதிய திட்டம். சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஐநா அறிக்கையின் அடிப்படையில் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளின் போது மட்டும் ஏற்படும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் வெளியேற்றம் 39% சதவிகிதம்.

இதனால் அடுத்த 40 ஆண்டுகளில் கட்டடங்கள் மூலம் வெளியேறும் நச்சுக்காற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தென் ஆப்ரிக்கா ஆராய்ச்சியாளர்கள் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவுநீர் மூலம் மறுசுழற்சி செய்யும் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

இதற்காக பல்கலைக்கழகத்தின் கழிவறையில் சிறுநீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து அதனோடு மணல் மற்றும் ‘யூரீஸ்’ என்ற ஒரு பாக்டீரியாவைச் சேர்த்து செங்கற்கள் உருவாக்கி தங்களது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

இந்த செங்கற்கள் தயாராக ஒரு வார காலம் தேவைப்படுகிறதாம். மேலும், இந்த செங்கற்கள் பயன்படுத்தும் மக்களின் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த புதிய மறுசுழற்சி திட்ட கண்டுபிடிப்புக்கு பெரிய செலவு ஏற்படவில்லை என்றாலும் சிறுநீர் சேகரிப்பு தான் பெரிய சாவாலாக இருந்ததாக கூறியுள்ளனர் இப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

Also See... அரசியல் பேசும் திரைப்படங்கள்... சமூக அக்கறையா? வணிக நோக்கமா?
Loading...
First published: November 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...