400 மாணவர்களின் கல்விக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வந்தர்!

news18
Updated: May 21, 2019, 1:15 PM IST
400 மாணவர்களின் கல்விக் கடன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வந்தர்!
ராபர்ட் எஃப் ஸ்மித்
news18
Updated: May 21, 2019, 1:15 PM IST
அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த செல்வந்தர் நடப்பு ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விக் கடன் முழுவதையும் தான் அடைப்பதாகக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மோர்ஹவுஸ் ஆண்கள் கலைக் கல்லூரியில் உரையாற்றிய செல்வந்தரான ராபர்ட் எஃப் ஸ்மித், மாணவர்களின் கல்விக்கடன் முழுவதையும் செலுத்த உள்ளதாகக் கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

ராபர்ட் எஃப் ஸ்மித் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், அந்தக் கல்லூரியில் படித்து வரும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செலுத்த வேண்டிய 10,000 டாலருக்கும் அதிகமான கல்விக் கடனுக்கான பொறுப்பை ஏற்றுள்ளார்.


இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட ராபர்ட் எஃப் ஸ்மித், “கடந்த 8 தலைமுறையாக எங்களது குடும்பம் இந்த நாட்டில் வசித்து வருகிறது, எனவே எனது குடும்பம் மாணவர்களின் கடனை முழுமையாகச் செலுத்த முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.இவரின் அந்த அறிவிப்பை வெளியிட்ட உடன் அங்கு கூடியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சுக்குள்ளானார்கள். பின்னர் சத்தமிட்டு கரகோஷத்துடன் இவரது அறிவிப்பைக் கொண்டாடி நன்றியையும் தெரிவித்தனர்.

56 வயதாகும் ராபர்ட் எஃப் ஸ்மித், 2000-ம் ஆடு விஸ்டா ஈக்விட்டி பார்னர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பல மென்பொருள் நிறுவனங்களில் இவர் முதலீடு செய்துள்ளார். ஃபோர்ப்ஸ் பில்லேனியர்ஸ் பட்டியலில், இவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...