Home /News /international /

9வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. பெண் ஊழியருடன் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் அம்பலம்...

9வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. பெண் ஊழியருடன் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் அம்பலம்...

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

Elon Musk : புதிதாக பிறந்த இரட்டையர்கள் மூலம் எலான் மஸ்க்கிற்கு தற்போது மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர்.

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், அண்மை காலமாகவே பரபரப்பு தகவல்களுக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் சிஇஓவாக இருந்து வரும் இவர், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

    இந்நிலையில், 51 வயதான எலான் மஸ்க் தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் 36 வயது பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த இரட்டை குழந்தைகள் கடந்த நவம்பர் மாதம் பிறந்துள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில்,எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைக்கும் போது தான் அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

    எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் ஷிவோன் சிலிஸ் 2017ஆம் ஆண்டு மே மாதம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய ஷிவோன் சிலிஸ், 2019ஆண் ஆண்டில் நியூராலிங்கில் சேர்ந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் நிறைவடைந்த பின், ட்விட்டர் நிறுவனத்தை ஷிவோன் முன்னின்று நடத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. எலாஸ் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: பாடி பில்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த தாலிபான் அரசின் புதிய உத்தரவு..

    மக்கள்தொகை கட்டுப்பாடு என்ற கருத்து அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளதால் உலகில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து இளம் வயதினர் எண்ணிக்கை குறைந்து வருவதை குறிப்பிட்ட தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் எலான் மஸ்க், மீண்டும் மனித குலம் அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு, பெரிய குடும்பங்களாக வாழத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதுவே மனித இனத்தை அழிந்து விடாமல் பாதுகாக்கும் எனக் கூறும் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தை குடியேற்றுவதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் கூறிவருகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Elon Musk

    அடுத்த செய்தி