உலகில் உள்ள வளர்ந்தநாடுகள், வளரும் நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பல திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் போடுகின்றனர். ஆனால் அப்படியான நிகழ்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவதில்லை. ஒரு சில நாடுகள் மட்டுமே அதில் பயன்பெறுகின்றன. பங்கேற்கின்றன.
அமெரிக்க-இந்திய உறவு என்பது சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கியது எனலாம். ராணுவ ஆயுதங்கள், தொழில்நுட்ப ஒத்துணர்வு, வேலைவாய்ப்பு, கல்வி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அமெரிக்கா இந்தியாவிற்குமான சந்தையும் வணிகமும் இருந்து வருகிறது. இந்நிலையில் காலநிலை மாற்றம், அதனால் மாறும் எரிசக்தி மூலப்பொருட்கள் மாற்றத்திலும் அமெரிக்கா இந்தியாவிற்கு உதவ முன்வருவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், காங்கிரஸார் ஸ்காட் பீட்டர்ஸ் மற்றும் அமி பெரா ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட தூய்மையான ஆற்றல் மற்றும் காலநிலை ஒத்துழைப்புச் சட்டம், அமெரிக்க-இந்தியா காலநிலை மற்றும் தூய்மையான ஆற்றல் நிகழ்ச்சி நிரல் 2030 கூட்டாண்மையை நிறுவ முன்மொழிந்துள்ளது. இது சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பதற்கான முதன்மை மன்றமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. அமி
பெரா , ஆசியா, பசிபிக், மத்திய ஆசியா மற்றும் அணு ஆயுத பரவல் தடை தொடர்பான வெளியுறவு துணைக்குழுவின் தலைவராக உள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
உலகின் பழமையான குடியரசான அமெரிக்காவும், உலகின் பெரிய குடியரசான இந்தியாவும் இணைந்து காலநிலை மாற்றதால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவும் அதைத் தடுக்கவும் சேர்ந்து பணியாற்றுவது ஒரு நல்ல வளர்ச்சியாகப் பார்க்கிறேன்.
கார்பன் வெளியேற்றத்தைச் சமாளிக்க முருங்கை, வேம்பு மரங்களை நட வேண்டும்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்
இந்த மசோதா, சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அமெரிக்க-இந்தியா கூட்டாண்மையை ஊக்குவிக்க முயலும். இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றிற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் இந்தியாவில் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குவதற்கான திட்ட வரையறைகளை வழங்குதல் ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டுள்ளது..
அதோடு , இந்தியாவில் காலநிலை மாற்ற அபாயக் குறைப்பு மற்றும் பின்னடைவு உத்திகளை ஒருங்கிணைக்க, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா தற்போது தன எரிசக்தி மூலப்பொருட்களை கார்பன் வெளியிடும் பொருட்களில் இருந்து சூரியசக்தி, காற்று, என்று மாற்றி வருகிறது. 2030 க்குள் 50 சதவிகித எரிசக்தியை புதுப்பிக்கத்தக்க சக்திகளாக மாற்றும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.அதற்கான தொழில்முறை உதவிகளை அமெரிக்கா செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Climate change, Indian economy, US