2019 ஆம் ஆண்டில் உலகத்தில், யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தின் தொடக்கம் மேற்பட்டது. எந்த துறையில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் மற்ற துறைகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதில்லை. அதேபோல பேரழிவுகள் ஒரு சில இடங்களில் ஏற்பட்டாலும், மற்ற நாடுகளில் வருத்தத்தை ஏற்படுத்தியது மற்றும் உதவிக்கரம் நீட்டியதைத் தவிர, வாழ்வாதாரத்தை பாதிக்கவில்லை.
ஆனால் உலகம் முழுவதுமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கோவிட்-19 வைரஸ். ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் அல்ல அச்சுறுத்தும் சூழல் கொண்ட ஊர்களில், ஒரு சில வாரங்கள் நீடிக்கக்கூடிய ஊரடங்கு, உலகம் முழுவதிலுமே பல மாதங்கள், ஏன் ஓராண்டுக்கு மேல் நீடித்தது. உலகமே முடங்கிக் கிடந்தது. தற்போது கூட இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை. தடுப்பூசி கண்டுபிடித்தவிட்ட போதிலும், இதற்கு நிரந்தரமான மருந்தே கிடையாதா என்று கேட்கும் அளவுக்கு பாதிப்பு நீங்கவில்லை. இந்த நிலையில் மீண்டுமொரு Global Pandemic ஏற்பட வாய்ப்புள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். சிஎன்பிசியுடன் இவர் கலந்துரையாடலில் இது கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு வேரியண்டாக பாதிக்காது. வேறு ஒரு pathogen வடிவில் பெருந்தொற்று ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி கோவிட் தொற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி என்றும் அவர் தெரிவித்தார்.
பில்கேட்ஸ் தற்போது விடுத்துள்ள எச்சரிக்கையும் ஏற்கெனவே ஒமைக்ரான் பற்றி எச்சரிக்கை விடுத்ததை நினைவுபடுத்துகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்கனவே இவர் உலகளவில் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனை மற்றும் பருவகால மாற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தார். பில் கேட்சும் அவரது முன்னாள் மனைவியான மெலிண்டா கேட்சும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் உலகம் முழுவதிலும் இருக்கும் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
விரைவில் நாம் மற்றொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இது வேற ஒரு நுண் கிருமியால் ஏற்படும். முதியவர்களில் மற்றும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இருப்பவர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற உலக சுகாதார மையத்தின் குறிக்கோள் ‘மிகவும் தாமதமானது’ என்று கேட்ஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் 61 சதவிகிதம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர் .
அடுத்த பெருந்தொற்று, மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற சூழல் இருந்தாலும், நாம் கவனமாக செயல்பட்டால், விரைவில் கண்டறிந்து, பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.