பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அப்போதைய மைக்ரோசாஃப் தலைவர் பில் கேட்ஸை, அந்நிறுவனம் எச்சரித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களுள் ஒருவரும், கொடையாளரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ் உலகளவில் மிகவும் மதிப்புவாய்ந்த மனிதராக திகழ்கிறார். மெலிண்டாவுடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் 3ம் தேதி அறிவிப்பு வெளியானது.
அவருடைய 125 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த வரியில் பிரித்துக் கொள்வதற்காக வெல்த் டாக்ஸை குறைப்பதற்காக பில் கேட்ஸ் விவாகரத்து செய்து கொள்கிறார் என பல யூகங்கள் பேசப்பட்டன.
மைக்ரோசாஃப்ட் எனும் டெக் நிறுவன சாம்ராஜ்யத்தின் தலைவராக திகழ்ந்த பில் கேட்ஸ் 2008ம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகினார். மேலும் 2020ம் ஆண்டு மார்ச்சில் இயக்குனர் பதவியில் இருந்தும் விலகினார். இதனிடையே பெண் ஊழியர் ஒருவருக்கு தகாத வகையில் இ-மெயில் அனுப்பியதற்காக, 2008ம் பில் கேட்ஸை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டித்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்ரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Also read:
பெட்டில் படுத்துக்கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்தால் ரூ.25 லட்சம் சம்பளம்!
மைக்ரோசாஃப்டின் முழு நேர பெண் ஊழியர் ஒருவருக்கு பில் கேட்ஸ் தகாத முறையில் மின்னஞ்சல் அனுப்பியது கண்டறியப்பட்டதாகவும். பில் கேட்ஸ் அந்த பெண் ஊழியரை சந்திப்பதற்காக அலுவலகத்துக்கு வெளியே வரச் சொன்னதாகவும் அந்த இ-மெயிலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண்ணுடன் ஏற்கனவே 20 ஆண்டுகளாக பில் கேட்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இ-மெயில் விவகாரம் தெரியவந்ததை அடுத்து மைக்ரோசாஃப்ட் இயக்குனர்கள் குழுவினர் பில் கேட்ஸ் இதனை கைவிடுமாறு எச்சரித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பில் கேட்ஸ் இதனை ஒப்புக்கொண்டு, இனி இப்படி நடக்காது என மன்னிப்பு கோரியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Also read:
தீபாவளி ஷாப்பிங்.. லிட்டில் இந்தியாவில் சிங்கப்பூர் அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள்!
இது குறித்து ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த செய்தி உண்மை தான், மேற்கொண்டு தெரிவிக்க வேறேதுவும் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.
தொழிலில் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பில் கேட்ஸ், கொடையாளராகவும் திகழ்கிறார். கேட்ஸ் மெலிண்டா என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. இதனிடையே பில் கேட்ஸின் இமேஜ் சரிவுக்கு இந்த பெண் காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.