’புத்தாண்டு சபதமே எடுக்காத நான் 2019-ல் சபதம் எடுக்கிறேன்’- பில் கேட்ஸ்!

தனது புத்தாண்டு சபதம் குறித்து தனது ப்ளாக் போஸ்டில் பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார் பில் கேட்ஸ்.

Web Desk | news18
Updated: December 31, 2018, 1:33 PM IST
’புத்தாண்டு சபதமே எடுக்காத நான் 2019-ல் சபதம் எடுக்கிறேன்’- பில் கேட்ஸ்!
Bill gates
Web Desk | news18
Updated: December 31, 2018, 1:33 PM IST
இதுவரையில் ஒரு முறை கூட புத்தாண்டு சபதம் ஏற்காத பில் கேட்ஸ், 2019-ல் முதன்முறையாக இரண்டு சபதங்களை ஏற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2018-ன் நினைவுகளோடு 2019-ஐ வரவேற்கும் வகையில் தனது ப்ளாக் பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் உலகப் பணக்காரரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ்.

தனது ப்ளாக் போஸ்டில், “என்னுடைய 20-ம் வயதுகளில் எனக்குள் எழுந்த கேள்விகளுக்கும் தற்போது 63 வயதில் எனக்குள் எழும் கேள்விகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அன்றிலிருந்து இன்று வரை எனது பணியின் தரத்தை நான் ஆய்வு செய்வதைத் தொடர்ந்து வருகிறேன்.

ஆனால், என்னுடைய குடும்பத்துக்கான நேரத்தை நான் அளித்து வருகிறேனா? புதிய விஷயங்களைக் கற்று வருகிறேனா? பழைய நண்பர்களோடு இணக்கத்தையும் புதிய நண்பர்களோடு உறவையும் வளர்த்துக் கொள்கிறேனா?

இந்தக் கேள்விகளை எல்லாம் இன்று தான் யோசிக்கிறேன். என்னுடைய 25-வது வயதில் இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு சிரிப்பை வரவழைத்திருக்கும். வாரன் பஃவெட் சொன்னது போல் நான் விரும்பு எல்லோரும் என்னை விரும்புகிறார்களா? எனத் தெரிந்து கொள்வது சிறந்த அளவீடாக இருக்கும் என நினைக்கிறேன்.

2019-ல் இரண்டு துறைகளில் டெக்னாலஜியால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து கற்றுக்கொள்ளப் போகிறேன். முதலாவது, ’தனியுரிமை மற்றும் கண்டுபிடிப்புகள்’. புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் தனி மனிதனின் தனியுரிமையைக் காப்பது. இரண்டாது, கல்வித் தளத்தில் தொழில்நுட்பம். இந்த இரு விஷயங்களையும் கற்றுக்கொள்ளப் போகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: அதிகாரிகளின் அலட்சியத்தால் சென்னையை அச்சுறுத்தும் மருத்துவக்கழிவுகள்
Loading...
First published: December 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...