உலகின் மிகப்பெரிய நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்த மைக்ரோசாப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் ஆவார். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிப்பவரும் இவரே. பில் கேட்ஸ் சமீபத்தில் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தந்தை பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், அவரது மகள் ஜெனிபர் கேட்ஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறப்பு செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் 'அப்பாவுக்கு 66வது பிறந்தநாள். இதனை கொண்டாடுவது மகிழ்ச்சி. முடிவில்லாத ஆர்வம், நிலையான ஆய்வு மற்றும் மனிதகுலத்திற்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் போன்றவற்றை உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்வதற்கு நன்றி. சூரியன் ஒவ்வொரு முறையும் சுற்றி வருவதற்குள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்று சொல்லி கொடுத்தவர் நீங்கள்.
என்னுடைய இந்த கனவு தினமான இன்றைக்கு நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்த நினைவுகள் என்னுடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்’ என்று எழுதி உள்ளார். அவர் பகிர்ந்த படம் ஜெனிபர் கேட்ஸ் திருமணத்தின் போது தன்னுடைய தந்தையுடன் இருக்கும் படம் ஆகும். அதில் பில் கேட்ஸ் தனக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் மகளை பார்த்து சிரிப்பது போன்று உள்ளது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் அக்டோபர் 16 அன்று திருமணம் செய்து கொண்டார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவைக் காண…
இந்த பதிவு நேற்று அக்டோபர் 29 இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இதுவரை 85,000க்கும் மேற்பட்டோர் இந்த பதிவினை லைக் செய்துள்ளனர். பில் கேட்சுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 1975ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை பில் கேட்ஸ் 1994ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
Also read:
இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரா? யார் இந்த ஹென்ரி கேவில்?
அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாப நோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் போன்றவை இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த பவுண்டேஷன் நிறுவனத்தை பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பிரென்ச் கேட்ஸ் இருவரும் சேர்ந்து தான் நிர்வாகம் செய்து வருகின்றனர். பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதிகள் 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.