அடேங்கப்பா.. இந்திய உணவுக்காக எலிசபெத் மகாராணியின் டீ விருந்தையே தவிர்த்த பில் கிளிண்டன்!

Bill Clinton - Queen Elizabeth

கிளிண்டனுக்கு தேவையான ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும் என நினைத்திருந்த அவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் ஏமாற்றமாக இருந்துள்ளது.

  • Share this:
1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன், எலிசபெத் மகாராணியின் டீ விருந்து அழைப்பை நிராகரித்து, இந்தியா உணவை சாப்பிட செல்வதாக கூறிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்தது தொடர்பாக ஆவணக் காப்பங்களில் இருந்த குறிப்புகள் வெளியாகியுள்ளது. அதில், கிளிண்டன், எலிசபெத் மகாராணியின் டீ விருந்தை நிராகரித்துவிட்டு, இந்திய உணவை சாப்பிட விரும்பியதாக இடம்பெற்றுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான தகவல்களின்படி, இங்கிலாந்தில் அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக டோனி பிளேர் இருந்துள்ளார். அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்ற கிளிண்டன், டோனி பிளேரை சந்தித்தாலும், அந்தப் பயணத்தில் விருந்தினர் (Tourister) போல மட்டுமே இருக்க விரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

மேலும், கிளிண்டன் ஷாப்பிங் செய்ய விரும்பியதாகவும், அப்போது இந்திய உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால், இங்கிலாந்து அதிகாரிகள் கிளிண்டனின் பயணத்தில் அமெரிக்கா - இங்கிலாந்து உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதியுள்ளனர்.

Bill Clinton - Queen Elizabeth


இங்கிலாந்து அரசின் தனிச் செயலாளராக இருந்த டொமினிக் சில்காட், வெளியுறவுத்துறை செயலாளர் பார்ட்டன், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் தனிச் செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து முயற்சி செய்துள்ளனர்.

அதற்காக இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க அதிபர் கிளிண்டன் சந்திப்பை முக்கியத்துவமாக மாற்றுவதற்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால், கிளிண்டனுக்கு தேவையான ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும் என நினைத்திருந்த அவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் ஏமாற்றமாக இருந்துள்ளது. அதாவது, இரு தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கிளிண்டன் என்ன செய்ய உள்ளார்? என இங்கிலாந்து அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

Also Read:  ‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை நடிகரின் உணர்ச்சிமிகு இன்ஸ்டா பதிவு!

ஆனால், கிளிண்டன் என்ன செய்யப்போகிறார்? என்ற தெளிவான தகவல் அவர்களிடமே இல்லை என இங்கிலாந்து அதிகாரியான பார்ட்டன் பதிவு செய்துள்ளார். ஒரு ஒரு தகவலை மட்டும் பகிர்ந்து கொண்டதாக கூறும் பார்ட்டன், அதிபர் கிளிண்டன் டூரிஸ்ட் போல இருக்க விரும்புவதாகவும், பூங்கா, கடைகளுக்கு செல்ல உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்ததாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின்போது இந்திய உணவு வகைகளை சாப்பிட கிளிண்டன் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர். பக்கிங்ஹாம்ஷையரில் கிளிண்டனுடனான சந்திப்பை நடத்த இங்கிலாந்து அதிகாரிகள் திட்டமிட்டபோதும், அமெரிக்க அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளனர். கடைசியில், விருந்து நடைபெற்ற மெனுவை பார்க்கும்போது கிளிண்டன் சாலமன், முயல் உள்ளிட்ட வகைகளை சாப்பிட்டுள்ளார். இந்திய உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
Published by:Arun
First published: