இலங்கை தலைநகர் கொழும்புவில் பைக்கில் இருந்து வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சவாய் திரையரங்கம் அருகே இந்த பைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டியையை ஒட்டி இலங்கையின் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 310-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விவாதிக்க, இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அரசு மன்னிப்பு கோரியது.
பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தனே “நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த தாக்குதலை வெளிநாட்டு அமைப்பின் உதவியுடன் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று மாலை இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் (AMAQ) வெளியிட்டுள்ள செய்தியை குறிப்பிட்டு ராய்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள சயான் தியேட்டர் அருகே, வெடிகுண்டுடன் பைக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, போலீசார் வெடிகுண்டை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் வெடிக்க வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.