உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா அந்நாட்டின் கிழக்கு எல்லையில் 1 லட்சம் வீரர்களையும், அதி நவீன ராணுவ தளவாடங்களையும் குவித்துள்ளது.
உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க கூடாது என்ற ரஷ்யாவின் நிபந்தனையை நிராகரிப்பதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பைடன், ரஷ்ய படைகளை எதிர்கொள்ள அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக உறுதியளித்தார்.
மேலும் படிக்க .. இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு
உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா அனுப்பியுள்ள 8 ஆயிரத்து 500 வீரர்களை உஷார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா அனுப்பியுள்ள குழு மூலம் மருத்துவம், விமானம், தளவாடங்கள், போர் வடிவங்கள் ஆகிய உதவிகள் செய்து தரப்படும்
இந்த வாரத்தின் தொடக்கத்தில் நான் பலமுறை கூறியது போல், படைகள் தயார் நிலையில் மட்டுமே உள்ளன. செயலில் இறங்கவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கவும் நேட்டோ நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையேயோன Nord Stream 2 எரிவாயு திட்டத்திற்கும் தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக்-வும் எரிவாயு திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
பால்டிக் கடலுக்கு அடியில் ஆயிரத்து 225 கிலோ மீட்டர் தொலைவிலான Nord Stream 2 திட்டம் 82ஆயிரம் 500 கோடி ரூபாயில் கட்டமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டால் ரஷ்யா கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படும்.
மேலும் படிக்க... ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.