பைடன் - டிரம்ப் இடையே முற்றும் மோதல் .. ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளம் தொடங்க டிரம்ப் திட்டம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை நிகழ்ந்த சில மணி நேரங்களுக்கு முன், ஆதரவாளர்களுடன், டொனால்டு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

டிரம்ப் - பைடன்
- News18 Tamil
- Last Updated: January 10, 2021, 9:10 AM IST
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவை ஏற்க முடியாது என டிரம்ப் அறிவித்த சூழலில், கடந்த புதன்கிழமை அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த சில மணி நேரங்களுக்கு முன், ஆதரவாளர்களுடன் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி குறித்த காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் வெளியிட்ட வீடியோவில், பேரணி செல்வதை தொலைக்காட்சியில் டிரம்ப் பார்வையிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும், பாப் பாடலுக்கு சிலர் நடனமாடும் காட்சியும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களை டிரம்ப் தூண்டிவிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, டிரம்பின் கருத்துக்கள் மேலும் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை சுதந்திரமாக பதிவிடும் வகையில், சொந்தமாக வலைதளத்தை உருவாக்க முயற்சித்து வருவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க...உலகின் NO.1 பணக்காரன் ஆனார் எலான் மஸ்க்..
மேலும் வரும் 20ம் தேதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என டிரம்ப் அறிவித்திருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் மட்டுமே டிரம்புடன் தாம் ஒத்துப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு டிரம்ப் வராமல் இருப்பதே நல்லது எனவும் பைடன் கூறியிருக்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த சில மணி நேரங்களுக்கு முன், ஆதரவாளர்களுடன் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி குறித்த காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் வெளியிட்ட வீடியோவில், பேரணி செல்வதை தொலைக்காட்சியில் டிரம்ப் பார்வையிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும், பாப் பாடலுக்கு சிலர் நடனமாடும் காட்சியும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களை டிரம்ப் தூண்டிவிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.