அரிசோனா, ஜார்ஜியா மாநிலங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்கத் தேர்தலில் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் வென்றுள்ள ஜோ பைடனுக்கான தேர்வுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது.

அரிசோனா, ஜார்ஜியா மாநிலங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலை
ஜோ பைடன்
  • News18 Tamil
  • Last Updated: November 15, 2020, 10:44 AM IST
  • Share this:
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இரவு பகலாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றிபெற்றதாக, கடந்த 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அரிசோனா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, அந்த மாநிலத்தில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி சுமார் ஒன்றரை வாரத்திற்கு பிறகு ஜார்ஜியா மற்றும் அரிசோனா மாநிலங்களில் ஜோ பைடனே வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வட கரோலினா மாநிலத்தை வென்றுள்ள டிரம்புக்கு 232 வாக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் படிக்க...அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் இந்தியாவுடன் தொடர்பு


இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் இனியும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என அறிவித்தார். அடுத்த ஆண்டு வேறு நிர்வாகம் இருக்கக்கூடும் என தனது தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்ட டிரம்ப், நேரம்தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2021 ஏப்ரலில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
First published: November 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading