அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் இணைத் தலைவராக இந்திய-அமெரிக்கர் விவேக் மூர்த்தி நியமனம்..

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமெரிக்கா வாழ் இந்திய மருத்துவர் தலைமையிலான குழுவை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் இணைத் தலைவராக இந்திய-அமெரிக்கர் விவேக் மூர்த்தி நியமனம்..
விவேக் மூர்த்தி
  • Share this:
அமெரிக்காவின் புதிய அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் தனது முதல் வேலையாக, ஒட்டுமொத்த நாட்டையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

 இதற்காக கொரோனா டாஸ்க் போர்ஸ் என்ற பணிக் குழுவை அமைத்துள்ளார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த குழுவின் இணைத் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக்மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெலாவரில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே, மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டயம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முகக் கவசம் அணிவதை அரசியல் ரீதியாக அணுகாமல், தேசத்தை முன்னோக்கி நகர்த்தி செல்வதற்கு சரியான தீர்வாக பார்க்கும்படி அறிவுறுத்தினார்.மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை பெற மருத்துவர் விவேக் மூர்த்தி தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் பைடன் தெரிவித்தார்.


கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி காலத்தில் சர்ஜன் ஜெனரலாக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading