• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடனும் கமலா ஹாரிசும் தேர்வு - டைம் இதழ் அறிவிப்பு!

இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடனும் கமலா ஹாரிசும் தேர்வு - டைம் இதழ் அறிவிப்பு!

கமலா-ஜோ பிடன்

கமலா-ஜோ பிடன்

அமெரிக்கத் தேர்தலை ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து டைம் இதழ் பாராட்டி எழுதியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனையும், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசையும் இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் அறிவித்துள்ளது.

    1927-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் டைம் இதழ் ஆண்டின் சிறந்த நபர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில், 1930- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஆண்டின் சிறந்த நபர் என அறிவிக்கப்பட்டார். பின்னர் 1947- ஆண்டு ஜூன் மாத இதழில் காந்தியின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது. 1999-ல் 100 ஆண்டுகளில் சிறந்த நபர் யார் என்ற பட்டியலில் இரண்டாவதாக இடம் பிடித்தார் மகாத்மா காந்தி.

    இந்நிலையில், இந்த ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடனும் கமலா ஹாரிசும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அட்டைப் படத்தில் அவர்களது புகைப்படத்தை வெளியிட்ட டைம் இதழ், 'அமெரிக்காவின் கதையை மாற்றியவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.

    Also read... 800 வருடங்களுக்குப் பிறகு வானில் தோன்றும் அரியநிகழ்வு: பைபிளில் கூறப்படும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இதுவா?

    மேலும் அமெரிக்கத் தேர்தலை ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து டைம் இதழ் பாராட்டி எழுதியுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் லீபுரோன் ஜேம்சை ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராகவும், தென்கொரியாவின் BTS எனப்படும் Bangtan Boys குழுவினரை சிறந்த பொழுதுபோக்கு குழுவினராகவும் அறிவித்தது.

    காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம் இதழின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின், அயதுல்லா கோமேனி ஆகியோரை சிறந்த நபர்களாக அறிவித்த போது பெரும் சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: