அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.
தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனமான AmeriCorps State and National-ன் இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Sonali Nijhawan
நியமிக்கப்பட்டுள்ளார். இதே அமைப்பின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Preston Kulkarni (வயது 42) நியமிக்கப்பட்டுள்ளார்.
டெக்ஸாஸில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த குல்கர்னி குறித்து அறிந்த ஜோ பைடன் அவரின் தலைமை பண்பு காரணமாக அவரை இப்பதவியில் நியமித்துள்ளார்.
சேவை மற்றும் பொது விவகாரங்களில் குல்கர்னிக்கு இருக்கும் அனுபவம் இதே அமைப்பில் வெளிநாட்டு சேவை அதிகாரியாக 14 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார். பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்கள் மற்றும் சர்வதேச தகவல் திட்டங்களில் பணியாற்றியுள்ளார். தைவான், ரஷ்யா, ஈராக், இஸ்ரேல் மற்றும் ஜமைக்கா நாடுகளில் சேவை புரிந்திருக்கிறார்.
தனது வாழ்க்கையை வளரும் தலைவர்கள் மற்றும் வளர்ந்து வரும் தேசிய சேவையில் ஈடுபடுத்தியுள்ளார். Stockton Service Corps என்ற அமைப்பில் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கல்வி முன்னோடிகளின் கலிபோர்னியா இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான். இவரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டமாகும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஜோ பைடன் அரசில் முக்கியத்துவம் அளித்து வருவது இந்திய - அமெரிக்க உறவில் புதிய சகாப்தம் படைக்கும் என கூறப்படுகிறது.