மோடியின் வருகையை எதிர்பார்கிறேன்! எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தைக் குறிப்பிட்டு பூடான் பிரதமர் பாராட்டு

தேர்வுகள் குறித்த எண்ணத்தை மோடி மாற்றியமைக்கிறார். அந்தச் சிந்தனைகள் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.

news18
Updated: August 15, 2019, 6:26 PM IST
மோடியின் வருகையை எதிர்பார்கிறேன்! எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தைக் குறிப்பிட்டு பூடான் பிரதமர் பாராட்டு
மோடி, லோடே டெஸ்ரிங்
news18
Updated: August 15, 2019, 6:26 PM IST
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த மனிதர். அவருடைய வருகையை எதிர்பார்க்கிறேன் என்று பூடான் பிரதமர் லோடே டெஸ்ரிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டுக்குச் செல்லவுள்ளார். இதுகுறித்த பூடான் நாட்டின் பிரதமர் லோடே டெஸ்ரிங் பேஸ்புக் பதிவில், ‘சமீபத்தில் நரேந்திர மோடி எழுதிய பரிச்சைக்கு பயமேன்(Exam Warriors) புத்தகத்தைப் படித்தேன். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது, அந்தப் புத்தகம் இளம் தலைமுறைக்கு வழிகாட்டுகிறது.

சொந்த வாழ்கையில் நிகழ்வுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதாக இருப்பதால், அந்தப் புத்தகத்தின் கருத்துகள் குழந்தைகள் நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்தி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. அதுதான் நரேந்திர மோடி. நான் இரண்டு முறை டெல்லி வந்திருந்தபோது,


அவருடனான சந்திப்பின்போது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் இருந்தார். நாங்கள் உடனே பழகிவிட்டோம். நாங்கள் இருவரும் நிறைய கருத்துகளை பகிர்ந்துகொண்டோம்’ என்று தெரிவித்தார்.

a
First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...