ஹோம் /நியூஸ் /உலகம் /

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் புதுவகை கொரோனா பாதிப்பு ஏற்படும் - மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் புதுவகை கொரோனா பாதிப்பு ஏற்படும் - மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரேனா

கொரேனா

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூட மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிஎஃப்.7 ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகை கொரோனா தொற்று பரவும் விதத்தை பார்போம்.

சீனாவில் பிஎஃப்.7 ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இவ்வகை வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிஎஃப்.7 ஒமைக்ரான் வகை தொற்று, பிஏ 5 ஒமைக்ரான் வைரஸின் மரபணுவை சேர்ந்தது.இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.

இதையும் படிங்க:  சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா வைரஸ்: மீண்டும் அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்

மருத்துவ அறிக்கைகளின்படி, இந்த வைரஸ் மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. உடலில் இவ்வகை வைரஸின் அடைகாக்கும் காலம் மிகவும் குறைவாகும். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூட மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வகை வைரஸ் பாதிப்பால், வழக்கமான தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சோர்வு ஆகியவை ஏற்படும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

First published:

Tags: CoronaVirus, Omicron BF 7 Variant