அமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்!
  • Share this:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் திடீரென விலகியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட பல முன்னணி அரசியல் பிரபலங்கள் களம் கண்டுள்ளனர். இதில் அண்மையில் கமலா ஹாரிஸ் விலகினார்.

குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேனுக்கும், சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது.


இந்நிலையில் சாண்டர்ஸ் விலகியதால் ஜோ பிடேன் டிரம்பை எதிர்த்து ஏகோபித்த ஆதரவுடன் அதிபர் போட்டியில் களத்தில் உள்ளார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading