அமேசான் நிர்வாக அதிகாரி ஜெஃப் பைசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் நெ.1 பணக்கார் ஆனார் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்.
கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணங்களால் உலக வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கங்கள் மாறி மாறி நிலவுகிறது. பல நாடுகளில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதால் இ-வணிக சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-வணிக சேவையின் முன்னணி நிறுவனமான அமேசான் பங்குகள் சரிவுகளை சந்தித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமோசனின் விற்பனை சரிந்துள்ளதால் நீண்ட நாட்களாக உலக பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அந்த நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பைசோஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதே நேரம் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டியதால் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த சில மாதங்களாக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.
லூயிஸ் உய்ட்டன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 186.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 186 பில்லியன் டாலர் உடன் ஜெப் பைசோஸ் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் 147.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உள்ளார்.
Also Read : EPF கணக்கிலிருந்து உங்கள் பணத்தை ஆன்லைனில் எளிதாக எடுப்பது எப்படி?
லூயிஸ் உயிட்டன் நிறுவனம் பல ஆடம்பர பிரண்ட்களை தன்வசம் வைத்துள்ளது. பென்டி, டியோர், கிவென்சே போன்ற பல முன்னணி பிராண்டுகளை லூயிஸ் உயிட்டன் நிறுவனம் தான் தலைமை வகிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral