ஹோம் /நியூஸ் /உலகம் /

மீண்டும் இஸ்ரேல் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி வாழ்த்து

மீண்டும் இஸ்ரேல் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேலில் வலதுசாரி கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைபற்றிய நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமரானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaJerusalem Jerusalem

  இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றுள்ளார். அன்மையில் நடந்து முடிந்த தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

  இஸ்ரேல் நாட்டு அரசியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பெரும் தலைவராக நெதன்யாகு திகழ்ந்து வருகிறார். அந்நாட்டின் பிரதமராக 1996-1999 ஆண்டு காலகட்டத்தில் முதல் முறையாக பதவி வகித்தார். அதன் பின் 2009ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்த அவர், சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார். 2021ஆம் ஆண்டில் அவரது கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பதவி விலகினார் நெதன்யாகு.

  இதையடுத்து யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து கடந்தாண்டு ஜூன் மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்றார். ஆனால், பென்னெட்டுக்கும் நீண்ட காலம் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. எனவே பென்னட் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கு இஸ்ரேல் தயாரானது.

  இதையும் படிங்க: இம்ரான் கானை கொல்லதான் வந்தேன்.. - கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

  புதிய தேர்தல் நடத்தப்படும் வரை இஸ்ரேலின் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் நெதன்யாகு கூட்டணி பெரும்பான்மை எண்ணிக்கையை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த நெதன்யாகுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Israel, PM Modi