மருத்துவமனைக்கு வருகை தந்த பெல்ஜியம் பிரதமர்... திரும்பி நின்று எதிர்ப்பை தெரிவித்த மருத்துவ பணியாளர்கள்...!

பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பாமல், ஆர்ப்பாட்டம் நடத்தமால் அமைதியாகவும் வலிமையாகவும் மருத்துவ பணியாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்

மருத்துவமனைக்கு வருகை தந்த பெல்ஜியம் பிரதமர்... திரும்பி நின்று எதிர்ப்பை தெரிவித்த மருத்துவ பணியாளர்கள்...!
  • Share this:
பெல்ஜியம் பிரதமர் சோஃபி வில்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்த போது மருத்துவபணியாளர்கள் திரும்பி நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்

பெல்ஜியம் நாட்டில் கொரோனா பரவலுக்கு எதிராக பிரதமர் சோஃபி வில்ம்ஸ் உகந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மருத்துவப்பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெல்ஜியத்தில் 55,280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவிற்கு குறைந்த அளவிலான பட்ஜெட் ஒதுக்கியது, மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்த அளவிலான சம்பளம், பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்தாமல் நர்சிங் பணியாளர்கள் தகுதியற்ற மருத்துவ பணியாளர்களை அரசாங்கம் நியமித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இந்நேரத்தில் பெல்ஜியம் பிரதமர் சோஃபி வில்ம்ஸ் ரஸ்ஸல்ஸில் உள்ள செயின்ட் பியர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மருத்துவ பணியாளர்கள் அவர் வருகை தந்த சாலையில் திரும்பி நின்று நின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.



பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பாமல், ஆர்ப்பாட்டம் நடத்தமால் அமைதியாகவும் வலிமையாகவும் மருத்துவ பணியாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்று பலர் அவர்களுக்கு தங்களது பாராட்டை தெரிவித்துள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading