ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்ய அதிபர் புதினின் பிறந்தநாளுக்கு பெலாரஸ் அதிபர் கொடுத்த கிஃப்ட் இதுதான்!

ரஷ்ய அதிபர் புதினின் பிறந்தநாளுக்கு பெலாரஸ் அதிபர் கொடுத்த கிஃப்ட் இதுதான்!

புதினுக்கு டிராக்டர் பரிசளித்த பெலாரஸ் அதிபர்

புதினுக்கு டிராக்டர் பரிசளித்த பெலாரஸ் அதிபர்

ரஷ்ய அதிபர் புதினுக்கு அவரது பிறந்தநாளில் பெலாரஸ் அதிபர் டிராக்டர் ஒன்றை பரிசாக தந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaMoscowMoscow

  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேற்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்லினில் எந்த ஆர்பாட்டமும் இன்றி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

  ரஷ்ய அதிபர் புதினினுக்கு அண்டை நாடான பெலாசரஸ் அதிபர் அலெக்ஸான்டர் லுஹான்ஸ்கோ வித்தியசாமான பிறந்தநாள் பரிசு ஒன்றை தந்துள்ளார். தன்னாட்டில் தயாரான சிறப்பு ரக டிராக்டர் ஒன்றை பரிசாக தந்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினின் மிக நெருங்கிய கூட்டாளியாக கருதப்படுபவர் லுஹான்ஸ்கோ. 1994ஆம் ஆண்டு முதல் பெலாரஸ் நாட்டின் அதிபராக உள்ள இவர், ரஷ்யாவுக்கு ஆதரவு விசுவாசியாக என்று இருப்பவர்.

  ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பின்னடைவும், விளாதிமிர் புதினுக்கு உலக நாடுகளின் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் புதினுக்கு உறுதுணையாக இருப்பதை குறிக்கும் விதமாகவே பெலாரஸ் அதிபர் ரஷ்யாவுக்கே வந்து அதிபர் புதினை அவரது பிறந்தநாளில் சந்தித்து இந்த டிராக்டரை பரிசாக தந்துள்ளார்.

  புதினுக்கு டிராக்டர் மீது ஆசையும் ஆர்வமும் அதிகம் எனக் கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் ஹானோவர் நகரிலும், 2010ஆம் டாம்போவ் நகரிலும், சமீபமாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவின் ரோஸ்டேவ்-ஆன்-டான் நகரிலும் புதின் டிராக்டர் ஓட்டி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

  இதையும் படிங்க: 12,000 ஊழியர்களை சத்தமில்லாமல் வீட்டுக்கு அனுப்பும் பேஸ்புக் - அதிர்ச்சி தகவல்

  அதேபோல் புதினின் இன்னொரு நட்பு நாடான தஜிகிஸ்தான் நாட்டு அதிபர் எமோமாலி ரஹ்மோனும் புதினுக்கு மெலான் பழங்களை மலைப்போல் அடுக்கி குவித்து பரிசாக தந்துள்ளார். 1952ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர் நகரில் பிறந்த புதின் ரஷ்யா உளவுப் படையில் ஏஜென்ட்டாக வேலை பார்த்தவர். சோவியத் ரஷ்யா உடைந்த பின் அரசியல் பக்கம் திருப்பிய புதின், 1999ஆம் ஆண்டு தனது ஆட்சியை ரஷ்யாவில் நிறுவி, தற்போது வரை சுமார் 23 ஆண்டுகள் அந்நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Birthday, Gift, Russia, Vladimir Putin