• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவில் ஒருவரது மலக்குடலில் சிக்கிய 6 செ.மீ பீர் க்ளாஸ் அறுவைச் சிகிச்சையால் அகற்றம்

சீனாவில் ஒருவரது மலக்குடலில் சிக்கிய 6 செ.மீ பீர் க்ளாஸ் அறுவைச் சிகிச்சையால் அகற்றம்

கோப்பு படம்

கோப்பு படம்

சீனாவில் ஒருவர் தனது மலக்குடலில் சிக்கிக்கொண்ட ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள பீர் கிளாஸை அகற்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் ஏன் மற்றும் எப்படி நடந்தது என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது.

  • Share this:
    சீனாவில் ஹுவாங் என்ற 53 வயதுடைய நபர் லூவில் உள்ள தென்மேற்கு மருத்துவ பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய சீன மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சையின் மூலமாக தனது மலக்குடலில் சிக்கியுள்ள பீர் கிளாஸை அகற்றியுள்ளார். பேராசிரியர் லி வுஷெங் மற்றும் அவரது மருத்துவர்கள் குழு எந்தவொரு சிக்கலும் ஏற்படாமல் ஹுவாங்கின் மலக்குடலில் சிக்கியுள்ள பீர் கிளாஸை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

    ஹுவாங்கின் என்ற நபர் தனக்கு ஏற்பட்ட ஒரு நமைச்சலை சரி செய்ய பீர் கிளாசை பயன்படுத்தியதாக மருத்துவர்கள் தெரித்துள்ளனர். தனது பின்புறத்தில் சொருகும்போது அது தற்செயலாக மாட்டிக் கொண்டுள்ளது, இதனால் அந்த நபர் நடக்க முடியாமல் மிகவும் சிரமத்தை எதிர் கொண்டுள்ளார்.

    இதனால் அவர் அந்த பீர் கிளாஸை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது உடனடியாக  அவருக்கு ஒரு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அவரது மலக்குடலில் சிக்கியுள்ள பீர் கிளாஸ் ஆசனவாயிலிருந்து இரண்டு அங்குலத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது என தெரிவித்துள்ளது.

    இதேபோல டைம்ஸ் நவ் பத்திரிகை வெளியிட்ட தகவலில், ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ்ரேயில் அந்த நபரின் மலக்குடலில் 6 செ.மீ உயரம், 5.6 செ.மீ விட்டம்கொண்ட கிளாஸ் என்பது தெரியவந்தது.

    மேலும் இப்படி ஒரு வினோதமான அறுவை சிகிச்சை சீனாவில் முதல் முறை அல்ல என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டே இதே போல் ஒரு சம்பவம் சீன மருத்துவமனையில் நடந்துள்ளது. 60 வயதுடைய நபர் ஒருவரின் மலக்குடலில் இருந்து ஏழு அங்குல நீளமுள்ள கிளாஸ் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

    சீனாவிலிருந்து வரும் இத்தகைய வினோதமான மற்றும் ஆச்சரியமான செய்திகள் பெரும்பாலும் அந்நாட்டின் பத்திரிக்கையில் தலைப்புச் செய்திகளாக உள்ளன. கடந்த மாதம் சீனாவில் மருத்துவர்கள் ஒரு நபரின் மூளைக்குள் 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 5 அங்குல நீளமுள்ள நாடாப்புழுவை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர்.

    அதற்கு முன்பு மே மாதத்தில் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மூளையில் இருந்து ஆறு அங்குல நாடாப்புழுவை அகற்றினர். சீனாவில் சராசரி உணவான பாம்பு, புழுக்கள் போன்றவை பெரும்பாலும் முக்கிய உணவுகளாக இருப்பதால் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: